திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி, கங்கைகொண்டான் உள்பட 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை முதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு தினம் இம் மாதம் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நினைவு தினத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், வேலாயுதபுரம், சிவகிரி, இளையரசனேந்தல், கரட்டுமலை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை முதல் காவல் சோதனை சாவடி தொடங்கப்படுகிறது.
இவற்றில் வட்டாட்சியர், மோட்டார் வாகன ஆய்வாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பணியில் இருப்பார்கள்.
இவர்கள் வாடகை வாகனங்களில் யாராவது தொண்டர்கள் வந்தால் அதை சோதனை செய்து, பின் அவர்கள் வந்த வாகனம் வாடகை வாகனம் என்று கண்டறியப்பட்டால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அவர்கள் செல்லும் வாகனத்தில் எல்லா அசல் ஆவணங்களையும் தன்னுடன் வைத்திருக்க வேண்டும்.
இந்தச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களை வீடியோவில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை மெஹ்ரின் பிர்சாதா திருமணம்!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

