தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாள்: அனைத்து வாகனங்களும் ஆன்லைனில் சரிபார்த்து அனுப்பி வைக்க நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வரும் 11-ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்(இன்று) அவரது நினைவிடத்தில்  அனுசரிக்கப்பட இருக்கிறது. எனவே அங்கு அஞ்சலி
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்திலிருந்து தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு புறப்படும் வாகனங்கள் அனைத்தும் ஆன்லைனில் சரிபார்த்த பின்னரே அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வரும் 11-ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்(இன்று) அவரது நினைவிடத்தில்  அனுசரிக்கப்பட இருக்கிறது. எனவே அங்கு அஞ்சலி செலுத்த செல்கிறவர்களின் வாகனங்கள் அனைத்தையும் சோதனையிடுவதற்காக 11 இடங்களில் வாகன தடுப்புச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், இச்சாவடி மற்றும் முக்குச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களில் செல்கிறவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க 15 இடங்களில் கண்காணிப்பு கேமராவும்  பொறுத்தப்பட்டுள்ளன.

இது போன்ற நிகழ்ச்சிக்கு வாடகை வாகனங்களில் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால், வாடகை வாகனமா, தனியார் வாகனமா என்பதை உடனுக்குடன் ஆன்லைனில் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்திலிருந்து உடனுக்கு உடன் தகவல்கள் பெறப்படும். அதையடுத்து, டிரைவரின் செல்போன் எண், உடன் செல்கிறவர்களின் விவரம் உள்ளிட்டவைகளையும் சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் உடனுக்குடன் கேமரா உதவியோடு கண்காணிக்கப்படவும் இருக்கிறது. இதையும் மீறி அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டால், அந்த அமைப்பினரிடமிருந்து முழு அளவு நஷ்டஈட்டுத் தொகை வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து செல்கிற வாகனங்கள் அனைத்தும் அந்தந்த காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளரிடம் பச்சை நிற அனுமதி சீட்டு பெற்று கண்ணாடியின் முன்புற பகுதியில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

இந்த வானங்கள் குறிப்பிட்ட வழித்தடங்களான விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி மற்றும் பார்த்திபனூர் வழியாக பரமக்குடிக்கு சென்று திரும்ப  வேண்டும். மேலும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com