விருதுநகரில் பாரதியார் நினைவு தினம்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் சத்தியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.மாரியப்பன் முன்னிலை வகித்து பாரதியாரின்திருவுருவப் படத்திற்கு
Updated on
1 min read

விருதுநகரில் பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் சத்தியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.மாரியப்பன் முன்னிலை வகித்து பாரதியாரின்திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். அதையடுத்து, இச்சங்கத்தினர் பாரதியாரின் கனவை நிறைவேற்றும் வகையில், சாதி வேறுபாடின்றி அனைவரும் சரிசமமாகவும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.

இதில், முன்னாள் மாவட்ட செயலாளர் எல்.முருகன் சிறப்புரையாற்றினார். நகர பொருளாளர் ரஞ்சித், மாவட்ட குழு உறுப்பினர் செல்லக்கனி, நகர் குழு உறுப்பினர்கள் கோடீஸ்வரன், லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com