எழுதுபொருள் அச்சுதுறையில் கம்மியர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

சென்னை எழுது பொருள் அச்சுத்துறையில் இளநிலை கம்மியர் பணியிடத்திற்கு குறிப்பிட்ட தகுதியை பெற்றிருக்க வேண்டும். 10-வது வகுப்பு தேர்ச்சியுடன், அரசு அங்கிகாரம் பெற்ற தொழிற் பயிற்சி
Updated on
1 min read

எழுதுபொருள் அச்சுத்துறையில் காலியாக உள்ள இளநிலை கம்மியர் காலிப்பணியிடத்திற்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழுது பொருள் அச்சுத்துறையில் இளநிலை கம்மியர் பணியிடத்திற்கு குறிப்பிட்ட தகுதியை பெற்றிருக்க வேண்டும். 10-வது வகுப்பு தேர்ச்சியுடன், அரசு அங்கிகாரம் பெற்ற தொழிற் பயிற்சி நிலையத்தில் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக் அல்லது மெக்கானிக் மெஷி்ன் டூல் மெயின்டன்ஸ் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, தொழில் பழுகுநராகவும் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு 1.7.2013 அன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினர் ஆகியோருக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) மற்றும் பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது வரம்புச் சலுகை உண்டு.

பதிவு மூப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர், அருந்ததியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) மற்றும் பொதுப்பிரிவினர், ஆதரவற்ற விதவைகள், கலப்பு திருமணம் புரி்ந்தவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் படை வீரர்களைச் சேர்ந்தோர், நிலம் வழங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் உள்ளிட்ட அனைவருக்கும் பதிவு மூப்பு 6.9.2013 தேதி வரையில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பதிவு மூப்பு உடையவர்கள் வருகிற 16-ம் தேதி விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். அங்கு தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட இருக்கிறதா என்கிற விவரங்களை குறித்து அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரி்க்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இப்பணிக்காலியிடத்திற்கு மாநில அளவில் உத்தேச பதிவு மூப்பு பின்னர் தெரிவிக்கப்பட இருப்பதாகவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com