நரேந்திரமோடி பிரதமரானால் இந்தியாவில் வாழமாட்டேன்: எழுத்தாளர் அனந்தமூர்த்தி

பெங்களூரு,வாடியா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தநிகழ்ச்சியில் பேராசிரியர் பரகூர் ராமசந்திரப்பா எழுதிய 'ஆக்கப்பூர்வமான சமரசம்' மற்றும் 'கடவுளின் ரகசியம்' என்ற கன்னட நூல்களை முன்னாள் மத்திய

நரேந்திரமோடி பிரதமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று ஞானபீடவிருதுபெற்ற கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி தெரிவித்தார்.

பெங்களூரு,வாடியா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தநிகழ்ச்சியில் பேராசிரியர் பரகூர் ராமசந்திரப்பா எழுதிய 'ஆக்கப்பூர்வமான சமரசம்' மற்றும் 'கடவுளின் ரகசியம்' என்ற கன்னட நூல்களை முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வெளியிட, அவற்றைமொழி அறிஞர் கே.வி.நாராயணா, ஞானபீடவிருதுபெற்ற எழுத்தாளர் அனந்தமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியில் அனந்தமூர்த்தி பேசியதாவது:

ஜவகர்லால்நேரு எழுதிய 'இந்திய வரலாறு'(டிஸ்கவரி ஆஃப் இந்தியா)நூலைபடித்த யாரும் நரேந்திரமோடியை நாட்டின் பிரதமராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். முன்னாள் பிரதமர் நேரு, அண்ணல் காந்தியடிகள் கனவு கண்ட இந்தியாவை நரேந்திரமோடிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. நரேந்திரமோடி ஆளும் இந்தியா பண்டைய காலத்தை போன்றதாகவும் இருக்காது, நம்முடைய காலத்தை போன்றதாகவும் இருக்காது. ஆனால், அரசாங்கத்திற்கு மக்கள் அஞ்சிவாழும் அராஜக காலமாக இருக்கும். எனவே, நரேந்திரமோடி ஆட்சி செய்தால், அந்த இந்திய நாட்டில் நான் வாழமாட்டேன். நரேந்திரமோடியின் ஒருமுகத்தை மட்டும் வெளியிடும் ஊடகங்கள், மற்றொரு முகத்தை மறைத்துவருவது துரதிருஷ்டம். நரேந்திரமோடி பிரதமரானால், பண்டைய இந்தியாவின் மாண்புகளுடன் காந்தி,நேரு கண்ட கனவு இந்தியா சீரழியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com