மனைவி கொலை: கணவர் கைது

மதுரை மாவட்டம் விக்கிரமங்களம் அருகே உள்ளது வடகாட்டுப்பட்டி. இவ்வூரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரது மனைவி பசுபதி (50). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனியாக
Updated on
1 min read

மதுரை அருகே மனைவி தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொன்ற கணவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் விக்கிரமங்களம் அருகே உள்ளது வடகாட்டுப்பட்டி. இவ்வூரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரது மனைவி பசுபதி (50). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.  தங்கப்பாண்டிக்கும் பசுபதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.மனைவி தன்னை மதிக்காமல் விஷேசங்களுக்கு போய்வருவதாக தங்கப்பாண்டி வருத்தப்பட்டுவந்துள்ளார். இந்தநிலையில் சனிக்கிழமை இரவும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பசுபதி தூங்கச்சென்றார். அதிகாலையில் திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது தலையில் பலத்த காயத்துடன் பசுபதி உயிரிழந்துகிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்ததும் விக்கிரமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பசுபதி சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.  மனைவி தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொன்றதாக தங்கப்பாண்டி கூறியதாகவும், இதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com