சத்துணவு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் அருகே இனாம்ரெட்டி கிராமத்தில் பல்வேறு திட்டங்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சென்று ஆட்சியர் டி.என்.ஹரிஹரனஅ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில், இங்கு அரசு
சத்துணவு மையங்களில் ஆட்சியர் ஆய்வு
Updated on
1 min read

விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சத்துணவு மையங்களில் அதிகாரிகளுடன் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் அருகே இனாம்ரெட்டி கிராமத்தில் பல்வேறு திட்டங்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் சென்று ஆட்சியர் டி.என்.ஹரிஹரனஅ பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில், இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார். பின்னர் வருகைப் பதிவேடுகளை சரிபார்த்து, உணவு சமைக்கும் அறைக்கு சென்றார். அங்கு சுத்தமாக சமைக்கப்படுகிறதா, சுகதாராமாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மதிய உணவிற்கான பதார்த்தங்களை ஒவ்வொன்றாக பார்த்தார். பின்னர் அருகில் அங்கன்வாடி மையத்திற்கு சென்றார். குழந்தைகளின் வருகை பதிவேடுகளையும், அதற்கேற்ப உணவு சமைக்கப்பட்டுள்ளதா என பாத்திரங்களை பார்த்தார்.

அதையடுத்து, எக்காரணம் கொண்டும் சமைத்ததும், அப்பள்ளியின் தலைமையாசிரியரோ அல்லது பொறுப்பாளர் ஆகியோர் சாப்பிட்டு பார்த்துதான் குழந்தைகளுக்கோ, மாணவ, மாணவிகளுக்கோ வழங்க வேண்டும் என பணியாளர்களை கேட்டுக் கொண்டார். இக்கிராமத்தில் ஒதுக்கு புறத்தில் உள்ள மயான பணிகள் நடந்து வருகிறது. அப்பணிகளை தரமாக செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், தேசிய ஊரக வேலை திட்டம், பசுமை குடியிருப்பு திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்கும்படி பயனாளிகளை ஆட்சியர் கேட்டுக் கொண்டார். அப்போது, உடன் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராம், உதவி பொறியாளர் சுப்பையா, ஞானக்குமார், தீபக்ராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com