மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற பேரவை உறுப்பினர்குழு தேர்தலுக்கு வரும் 25-ம் தேதி மனுத்தாக்கல்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் ஒதுக்கீட்டிற்கான ஆட்சி மன்ற பேரவை உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு வருகிற 25-ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி
Updated on
1 min read

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் ஒதுக்கீட்டிற்கான ஆட்சி மன்ற பேரவை உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு வருகிற 25-ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை காமராஜர் பல்கலை கழக ஆட்சி மன்ற பேரவைக்குழு உறுப்பினராக விருதுநகர் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி தலைவர்களில் ஒருவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்வதற்கு அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட நாளில் தொடங்கி, அக்.4ம் தேதி வரையில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும். அதையடுத்து, அக்.4ம் தேதி மாலை 4 மணிக்கு வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த மனுக்களை வருகிற அக்.10ம் தேதி 3 மணிக்குள் திரும்ப பெற வேண்டும்.

இதில், வாக்கு பதிவு நடைபெறும் நிலையில் அக்.10ம் தேதி தகுதியான உள்ளாட்சி பிரதிநிதி வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும். அதையடுத்து, அக்.21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இந்த வாக்குச்சீட்டுக்களை  தேர்தல் நடத்தும் அலுவலரால் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். அதே நாளில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட இருப்பதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com