விருதுநகரில் வீட்டிறகு முன்புறம் நின்றிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து நூதன முறையில் 8 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் சௌந்தரபாண்டியனார் தெருவைச் சேர்ந்தவர் நிர்மலா(58). இவர் வீட்டிற்கு முன்புறம் தோட்டப்பகுதி மற்றும் தெருவிலும் புதன்கிழமை மாலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர் குறிப்பிட்ட தெருவிற்கு எவ்வழியாக செல்வது என முகவரி கேட்டராம். அதற்கு, வழிகாட்டுவதற்காக திரும்பும் போது திடீரென கழுத்தில் இருந்த 8 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு வாகனத்தில் தப்பினாராம்.
இது குறித்து குரல் எழுப்பியதை அடுத்து பொதுமக்கள் வந்து சுற்றி வளைப்பதற்குள் மர்ம நபர் வாகனத்தில் அடுத்த தெரு வழியாக சென்று தப்பினார். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம் நிர்மலா புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.