தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸார் வெள்ளிக்கிழமை
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

விருதுநகரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸார் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். மக்களவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜி.வி.கார்த்திக் முன்னிலை வகித்தனர். திருமங்கலம் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக், விருதுநகர் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் மோகன் உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினார்கள். இம்மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.60 முதல் ரூ.80 வரையிலேயே கூலி வழங்கப்படுகிறது. இதனால், தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருவதால், முழு அளவு கூலித்தொகையான ரூ.148 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மக்களவை தொகுதி இளைஞர் காங்கிரஸ்  பொதுச்செயலாளர்கள் பால்பாண்டி, சதீஸ் மற்றும் மைக்கேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com