பொதுக்குளியல் தொட்டியில் தலித் மக்கள் குளித்ததால் பிரச்னை: அதிகாரிகள் சமரசம்

விருதுநகர் அருகே பொது குளியல் தொட்டியில் தலித் மக்கள் குளித்ததால் மற்றொரு தரப்பினர் பிரச்னை செய்ததை அடுத்து அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமதானம் செய்து
Updated on
1 min read

விருதுநகர் அருகே பொது குளியல் தொட்டியில் தலித் மக்கள் குளித்ததால் மற்றொரு தரப்பினர் பிரச்னை செய்ததை அடுத்து அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமதானம் செய்து வைத்தனர்.

விருதுநகர் அருகே வி.முத்துலிங்காபுரம் கிராமத்தில் 500 குடும்பங்கள் வரையில் வசித்து வருகின்றனர். இதில், மேற்கு தெருவில் அருந்ததியர் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு விருதுநகர் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து கடந்த 2012-13ல் பொது குளியல் தொட்டி ரூ.1.50 லட்சத்தில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு தெருவில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கிடைக்காத நேரத்தில் பொது குளியல் தொட்டியில் குளிப்பதற்காகவும், வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்வதற்காகவும் வருவது வழக்கமாகும். அப்போது, இக்கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் இங்கு குளிக்க வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இக்கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு அரசு ஆண்டுதோறும் ரூ.1850 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக அப்பள்ளியின் தலைமையாசிரியிடம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க கூறினோம். இங்குள்ள ஆசிரியர்கள் கழிப்பறையை சுத்தம் செய்து தந்தால் தான் விண்ணப்பங்களை அனுப்புவதாக கூறினாராம். அவர் அனுப்பிவில்லை என்றாலும் பராவாயி்லலை, கழிப்பறையை சுத்தம் செய்யச் சொன்னதுதான் மனசு சரியில்லாமல் போனதாக ராசு தெரிவித்தார்.இது குறித்து தலைமையாசிரியர் சுப்புராஜ் என்பவர் கூறுகையில், இது போன்று தெரிவிக்கவில்லை எனவும், இத்தி்ட்டம் இருப்பது குறித்து துப்புரவு பணியாளர்களிடம் கூறினேன். இவர்களை போய் கழிப்பறை வளாகத்தை சுத்தம் செய்ய சொல்லவில்லை என மறுத்தார்.  

இதுபோன்று சம்பவம் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னியினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சனிக்கிழமை நேரில் சென்று கள ஆய்வு செய்தனர். அப்போது, இதுபோன்ற பிரச்னை கிராம மக்களிடையே இருந்தது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, விருதுநகர் வட்டாட்சியர் மங்களநாதன், வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் மூக்கன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஞானகுரு, மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் ஊராட்சி தலைவர் கீதா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கிராமத்தில் அனைத்து சமுதாயத்தினரும் சமமாக இருக்க வேண்டும். இதற்காகவே பொது குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில், யார் வேண்டுமானலும் குளிக்கலாம் எனக் கூறி பொதுமக்களை சமதானம் செய்து வைத்தனர். அதன் பி்ன் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com