ஓடும் ரயிலில் 117 சவரன் நகை திருடு போனதாக நகை வியாபாரி புகார்

மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த பங்கஜம் தெருவைச் சேர்ந்த மணிவாசகம்(40), சகோதரர் குமாரும் நகைகடை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் புதன்கிழமை 975 கிராம் நகையுடன் மணிவாசகம்
Updated on
1 min read

விருதுநகர் அருகே ஓடும் ரயிலில் 117 சவரன் நகை திருடு போனதாக ரயில்வே காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு நகை வியாபாரி புகார் செய்தார். அதன் பேரில் ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த பங்கஜம் தெருவைச் சேர்ந்த மணிவாசகம்(40), சகோதரர் குமாரும் நகைகடை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் புதன்கிழமை 975 கிராம் நகையுடன் மணிவாசகம் வியாபாரம் செய்வதற்காக கோவில்பட்டிக்கு சென்றாராம். அங்குள்ள நகைக்கடைகளில் 35 கிராம் வரையில் விற்பனை செய்துள்ளார். அதையடுத்து, மீதமுள்ள 940 கிராம் நகையுடன் மதுரைக்கு திரும்பிச் செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்து  முத்துநகர் விரைவு ரயிலில் இரவு ரயிலேறி உள்ளார். அப்போது, கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் நின்று கொண்டே வந்துள்ளார். பின்னர் சாத்தூர் கடந்து வரும் போது இடம் கிடைத்துள்ளது. கைப்பையை கொக்கியில் மாட்டிவிட்டு அமர்ந்து வந்துள்ளார். வச்சக்காரப்பட்டியை கடந்து வந்த போது பையை பார்த்த நிலையில் காணவில்லையாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவாசகம் விருதுநகர் ரயில் நிலையத்தில் இரவு 10.40-க்கு இறங்கி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ஓடும் ரயிலில் 117 சவரன் நகை திருடு போனாது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com