கண்டோண்மென்ட் கடைகள் ஏலம்விட ஏதிர்ப்பு: அக்டோபர் 1 மற்றும் 3 ல் போராட்டம் அறிவிப்பு

கண்டோண்மென்ட் புதிய வணிக வளாகத்தில் உள்ள கடைகளை மீண்டும் பழைய உரிமையாளர்களுக்கே வழங்க வலியுறுத்தி வரும்

கண்டோண்மென்ட் புதிய வணிக வளாகத்தில் உள்ள கடைகளை மீண்டும் பழைய உரிமையாளர்களுக்கே வழங்க வலியுறுத்தி வரும் அக் 1 மற்றும் 3 தேதிகளில் உண்ணாவிரதம் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழு அறிவித்துள்ளது.

குன்னூர் வெலிங்டன் கண்டோண்மென்ட் நிர்வாகத்தின் அவசரக் கூட்டம் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் எஸ்.சுரேஸ்குமார் தலைமையில் கடந்த வாரம் நடைப் பெற்றது. இதில் கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பேரக்ஸ் வணிக வளாகத்தில் உள்ள 34 கடைகளை  கண்டோண்மெண்ட் நிர்வாகம் மீண்டும் பழைய கடை உரிமையாளர்களுக்கே வழங்க மறுப்புத் தெரிவித்து பொது ஏலம் விட கணடோண்மென்ட் தலைமை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் இந்தக் கடைகளை நம்பியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறி அந்தக் கடைகளை பழைய கடைக்காரர்களுக்கே வழங்க வேண்டும் என்று போர்டு உறுப்பினர்கள் கண்டோண்மென்ட் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் வரும் அக் 3 ம் தேதி கடைகள் அனைத்தும் ஏலம் விடப்படும் என்று கண்டோண்மென்ட் நிர்வாகம் அறிவித்து விட்டதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போர்டு  உறுப்பினர்கள் முன்னாள் போர்டு துணைத் தலைவர் பாரதியார் மற்றும் தற்போதைய துணை தலைவர் விநோத் மற்றும் குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை ஐஎம்ஏ ஹாலில் அவசரக் கூட்டத்தினை நடத்தினர்.

இதில்  கடைகள் ஏலம் விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 1 ம் தேதி கண்டோண்மென்ட் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டமும், 3 ம் தேதி அலுவலக முற்றுகைப் போராட்டமும் நடைப்பெறும் என்று போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com