சிரியாவில் ரசாயன ஆயுதத் தாக்குதலுக்கான ஆதாரங்கள் உள்ளன: ஜான் கெரி
By | Published On : 31st August 2013 12:16 AM | Last Updated : 31st August 2013 12:16 AM | அ+அ அ- |

சிரியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் மீது ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அமெரிக்க நாட்டின் அரசுச் செயலர் ஜான் கெரி வெள்ளிக்கிழமை அன்று கூறினார்.
பஷார் ஆசாத் தன் நாட்டு மக்கள் மீது ரசாயன விஷ வாயுவை செலுத்தியிருப்பதற்கு வலுவான மற்றும் தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன, இதனை ஒபாமா நிர்வாகம் தனது உளவுத்துறை தகவல்கள் மூலம் உறுதிப் படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சிரியாவில் 1400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விஷ வாயு செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கெரி கூறியுள்ளார். இவர்களில் சுமார் 400 பேர் சிறுவர்கள், குழந்தைகள் என்று கூறியுள்ளார் கெரி.