மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல்

தமிழக சட்டமன்றம் இன்று காலை கூடியதும், மறைந்த அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டமன்றம் இன்று காலை கூடியதும், மறைந்த அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள்  உறுப்பினர்களான  இரா. பஞ்சாட்சரம்  21.9.2012 அன்றும்,   ஆர்.டி. அரங்கநாதன்  6.11.2012 அன்றும்,   கே.ஆர். முனிரத்தினம்  18.11.2012 அன்றும்,  நா. கிருஷ்ணன்  18.11.2012 அன்றும்,  வீரபாண்டி எஸ். ஆறுமுகம்  23.11.2012 அன்றும், டாக்டர் த. முகமது சலீம்  23.11.2012 அன்றும்,   எஸ். செல்வராஜ்  25.11.2012 அன்றும்,   மு. சத்தியமூர்த்தி  3.12.2012 அன்றும்,  பெ. வேங்கா கவுண்டர்  9.12.2012 அன்றும், கொளத்தூர் கோதண்டம்  21.12.2012 அன்றும்,    மா. சுப்பிரமணியம்  15.1.2013 அன்றும்,   கே.எம்.எம். மேதா  24.1.2013 அன்றும்,   சா. கிருஷ்ணமூர்த்தி  27.1.2013 அன்றும் மற்றும்  ஜி. நடராஜன்  27.1.2013 அன்றும் மறைவுற்ற செய்தியினை இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

* இரா. பஞ்சாட்சரம்   1989 முதல் 1991 வரை மேல்மலையனூர்  தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புற பணியாற்றினார்.

* ஆர்.டி.  அரங்கநாதன்  1991 முதல் 1996 வரை  விருதாச்சலம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப்  பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட  பணியாற்றினார்.

* கே.ஆர். முனிரத்தினம்  1962 முதல்  1967 வரை ஆற்காடு தொகுதியிலிருந்து தமிழ்நாடு  சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல முறையில் பணியாற்றினார்.

* நா. கிருஷ்ணன்  1977 முதல் 1980 வரை  ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப்  பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டத்தக்க  வகையில் பணியாற்றினார்.

* வீரபாண்டி எஸ். ஆறுமுகம்  1962 முதல் 1967 வரையிலும், 1967 முதல் 1971 வரையிலும், 1971 முதல் 1975 வரையிலும் மற்றும் 1996 முதல் 2001 வரையிலும் நான்கு முறை வீரபாண்டி தொகுதியிலிருந்தும், 1989 முதல் 1991 வரையிலும் மற்றும் 2006 முதல் 2011 வரையிலும் இரண்டு முறை சேலம்-2 தொகுதியிலிருந்தும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றினார்.  மேலும், 1978 முதல் 1984 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1989 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2001 வரையிலும் மற்றும் 2006 முதல் 2011 வரையிலும் அமைச்சராகவும் பணியாற்றினார்.

* டாக்டர் த. முகமது சலீம்  1985 முதல் 1988 வரை பெரியகுளம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டத்தக்க வகையில்  பணியாற்றினார்.

* எஸ். செல்வராஜ்  1977 முதல் 1980 வரையிலும்  மற்றும் 1996 முதல் 2001 வரையிலும் இரண்டு முறை சமயநல்லூர் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சீரிய முறையில் பணியாற்றினார்.  மேலும், 1996 முதல் 2001 வரை அமைச்சராகவும் பணியாற்றினார்.

* மு.  சத்தியமூர்த்தி  1971 முதல் 1976 வரை புதுக்கோட்டை  தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார்.

* பெ. வேங்கா கவுண்டர்  1977 முதல் 1980 வரை வீரபாண்டி தொகுதியிலிருந்து தமிழ்நாடு  சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு  சிறந்த முறையில் பணியாற்றினார்.

* கொளத்தூர்  கோதண்டம்  1967 முதல் 1971 வரை  மதுராந்தகம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப்  பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புற  பணியாற்றினார்.

* மா. சுப்பிரமணியம்  1971 முதல் 1976 வரை  ஈரோடு தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப்  பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாகப்  பணியாற்றினார்.

* கே.எம்.எம். மேதா  1967 முதல் 1971 வரை பெரியகுளம்  தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல முறையில் பணியாற்றினார்.

* சா. கிருஷ்ணமூர்த்தி  1980 முதல் 1984 வரை ஆண்டிமடம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சீரிய முறையில் பணியாற்றினார்.

* ஜி. நடராஜன்   1967 முதல் 1971 வரை காட்பாடி  தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புற பணியாற்றினார்.

* இம்முன்னாள் உறுப்பினர்களது மறைவால் அவர்களைப் பிரிந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் இப்பேரவையின் சார்பிலும் என் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த இப்பெருந்தகைகளுக்கு  மரியாதை செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காக்குமாறு  கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு சபாநாயகர் இரங்கல் குறிப்பு தீர்மான விவரம் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com