கமுதி அருகே பைக் மீது பைக் மோதல்: திமுக பிரமுகர் சாவு
By திராவிடமணி | Published On : 30th March 2013 05:22 PM | Last Updated : 30th March 2013 05:22 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தாதகுளத்தைச் சேர்ந்தவர் ராமு மகன் சைவதுரை(48). இவர் நீண்ட் காலமாக கமுதி அருகே அபிராமத்தில் தங்கி கரிமூட்டம் போடும் தொழில் மற்றும் காண்ட்ராக்ட தொழில் செய்து வந்தார். இவர் மாவட்ட திமுக பிரதிநிதி ஆவார். இன்று பகலில் அபிராமத்திலிருந்து கமுதிக்கு தனது பைக்கில் சென்றார். அப்போது கமுதி அருகே கிளாமரத்துப்ப்பட்டியில் ஒர்க்ஷாப் கடை வைத்துள்ள தமிழரசன் என்பவர் தனக்கு வேண்டிய இடைச்சூரணியைச் சேர்ந்த காத்தனன் என்பவரை தனது பைக்கில் ஏற்றி கொண்டு அபிராமம் நோக்கி சென்றார். தமிழரசன் சொந்த ஊர் அபிராமம் அருகே உள்ள வடக்கூர் ஆகும்.
இந்த நிலையில் பசும்பொன் காலனி அருகே வந்துகொண்டிருந்த சைவதுரை பைக் மீது தமிழரசன் ஓட்டி சென்ற பைக் பயங்கரமாக மோதியதாம். இதில் இரு பைக்குகள் நொருங்கியது. இந்த விபத்தில் சைவதுரை தமிழரசன் இருவரும் படுகாயம் அடைந்தனர்.இருவருக்கும் கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து,பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சைவதுரை உயிரிழந்தார்.தமிழரசன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.லேசான காயம் அடைந்த காத்தனன் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழரசன் பைக்கில் சென்றபோது செல்போன் பேசியபடியே சென்றதுதான் விபத்துக்கு காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.விபத்து குறித்து கமுதி காவல் ஆய்வாளர் ஆனந்தன் விசாரணை நடத்தினார்.