தளவாய்புரம் அருகே 250 போலி மதுப்பாட்டில் பறிமுதல்: 2 பேர் கைது
By Pandian.S | Published On : 30th March 2013 08:34 PM | Last Updated : 30th March 2013 08:34 PM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே போலீஸார் வாகனச் சோதனையில் காரில் கடத்திய 250 போலி மதுப்பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையத்தை அடுத்து தளவாய்புரம் அசையாமேனி விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் வாகனத் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர். அப்போது, உள்ளே 250 போலி மது்பபாட்டில்கள் இருந்தது. இது தொடர்பாக முகவூரைச் சேர்ந்த கார் டிரைவர் முருகேசன்(48), சொக்கநாதன்புத்தூர் அய்யர்(32) ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.அதில், இப்பகுதியில் பங்குனிப் பொங்கல் திருவிழா நடந்து வருவதால் பல்வேறு பகுதிகளிலிருந்து வருவார்கள். அப்போது, போலி மதுப்பாட்டில்களை விநியோகம் செய்வதற்கு கொண்டு செல்வதாக போலீஸார் விசாரணையில் தெரிவித்தனர். அதையடுத்து, இருவர் மீதும் தளவாய்புரம் இன்ஸ்பெக்டர் சித்தன் வழக்கு பதிவு செய்து கைது செய்து, போலி மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.