நீதிமன்றம் கொண்டு வரும் வழியில் கைதி தப்பி ஓட்டம்
By | Published On : 30th March 2013 07:29 PM | Last Updated : 30th March 2013 07:29 PM | அ+அ அ- |

குன்னூர் அருகில் உள்ள கோழிக்கரை பகுதியில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட கைதி தப்பி ஓடிவிட்டதால் போலீசார் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர் அருகில் உள்ள கோழிக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்பவரின் மகன் சுப்ரமணி(35) இவர் மீது சில வழக்குகள் இருந்தததை தொடர்ந்து குன்னூர் நீதிமன்றத்துக்கு(மாஜிஸ்ரேட் வீட்டில்) நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது திடீரென்று அவர் காவலர்களை மீறி தப்பி ஓடிவிட்டார். இவரை குன்னூர் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.