பாஜகவில் நீடிக்க அமைச்சர் பசவராஜ் பொம்மை முடிவு
By muthumani | Published On : 30th March 2013 05:50 PM | Last Updated : 30th March 2013 05:50 PM | அ+அ அ- |

பாஜகவில்நீடிக்க அமைச்சர்கள் பசவராஜ் பொம்மை, உமேஷ்கத்தி முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர்களாக அறியப்பட்ட அமைச்சர்கள் பசவராஜ்பொம்மை, உமேஷ்கத்தி, முருகேஷ்நிரானி ஆகியோர் இம்மாத இறுதியில் பாஜகவில் இருந்து கஜகவில் இணையவிருப்பதாக செய்திகள வெளியாகி கொண்டிருந்தன. இந்நிலையில், தான் பாஜகவில் நீடிக்க விரும்புவதாக உமேஷ்கத்தி அறிவித்தார்.
இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உமேஷ்கத்தி கலந்து கொண்டனர். அவருடன் அமைச்சர் பசவராஜ்பொம்மையும் கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பாஜகவில் நீடிக்க விரும்புவதாகவும், அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே இலட்சியம் என்று பசவராஜ்பொம்மை தெரிவித்தார்.