சிபிஐ சட்டப்பூர்வ அமைப்பு அல்ல : கவுகாத்தி நீதிமன்றம்
By dn | Published On : 08th November 2013 09:54 AM | Last Updated : 08th November 2013 09:54 AM | அ+அ அ- |

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ சட்டப்பூர்வ அமைப்பு அல்ல என்றும், அதனால் சிபிஐயை காவல்துறைக்கு நிகரான அமைப்பாக கருத இயலாது என்று கவுகாந்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நவேந்திர குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கவுகாத்தி உயர் நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும் உரிமை கூட சி.பி.ஐ.க்கு இல்லை எனவும், சி.பி.ஐ. அமைப்பு உருவாக்கத்திற்கான தீர்மானத்திற்கு இது வரை குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.