இந்திய விமானப்படைக்கு தொழில்நுட்ப பதவிக்கான குரூப் 10 தேர்வு ராமநாதபுரத்தில் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எம்.ஏ. அபுபக்கர் சித்திக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமானப்படைக்கு குரூப் 10 தொழில்நுட்பம் பதவிக்கான தேர்வு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி மைதானத்தில் அக்டோபர் 20ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம். 1.2.1994 முதல் 30.5.1997 இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்கள். 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக்கூடாது. 10, பிளஸ் 2 இணையான கல்வித் தகுதி, கணக்கு, இயற்பியல் ஆங்கிலம் தேர்வில் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது பட்டயப் படிப்பு (Mechanical, Electrical, Electornics, Automobile, Computer Science, Instrumentaion Technology, Information Technology) முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு www.indianaiforce.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.