கடைத்திறப்பில் விபரீதம்: மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி
By | Published On : 01st September 2013 10:36 AM | Last Updated : 01st September 2013 02:37 PM | அ+அ அ- |

சென்னை, புழல் அருகே புத்தகரம் பகுதியில் அழகு நிலையக் கடை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு வந்தது. அதன் திறப்பு விழா இருந்த நிலையில், கடையின் விளம்பரப் பலகையை மாட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென விளம்பரப் பலகையில் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமுற்று திலக்ராஜ், நவீன், சினேகா, ராமமூர்த்தி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.