விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல்

தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதில், விருதுநகர் மக்களவை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில்
Updated on
1 min read

விருதுநகர் மக்களவை தொகுதியின் மதிமுக வேட்பாளர் வைகோ,  அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 3 சுயேட்சைகள் செவ்வாய்கிழமை வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 29-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதில், விருதுநகர் மக்களவை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில் சுயேட்சைகள் 5 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை தெலுங்கு வருட பிறப்பு என்பதாலும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இருந்தாலும் அன்றைய நாள்களில் வேட்பு மனுத்தாக்கல் எதுவும் இல்லை. இந்நிலையில் செவ்வாய்கிழமை மதிமுக, அதிமுக வேட்பாளர்களுடன் சுயேட்சையாக போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனர்.

ஆந்திராவில் தொடங்கப்பட்ட லோக் சத்தா கட்சியின் சார்பில் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக திருமங்கலத்தைச் சேர்ந்த தர்மராஜன் என்பவரின் மகன் பிரதீப்குமார் என்ற பாபு(30). இவர் பொறியியலில் எம்.இ. பட்டம் பெற்று தனியார் நிறுவனத்தில் கணிப்பொறியாளராக பணியாற்றி வருகிறார். அதோடுஸ, லோக் சத்தா கட்சியின் மாநில இளைஞரணி துணைத்தலைவராக இருந்தும் வருகிறார். இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை அளித்தார்.

இதேபோல், விருதுநகர் அருகே எரிச்சநத்தம் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பையா என்பவரின் மகன் பால்பாண்டி(30). இவர் பல்கலைகழகத்தில் தமிழில்(பி.எச்.டி) முனைவர் பட்டம் பெற்றவர். சிவகாசி அருகே திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் பெரியாழ்வார் என்பவரின் மகன் மாதவன்(45) ஆகிய 3 பேர் சுயேட்சைகளாக போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் அளித்தனர்.

சுயேட்சைகளின் மனுக்கள் சரிபார்ப்பு:

வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு அளிப்பதற்கு ஒரு இளைஞர் ரூ.1 உடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தையை பரபரபடையச் செய்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் அலுவலர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டனர். இவைகளை தடுப்பதற்காகவே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் அலுவலர்கள் மூலம் வேட்பு மனுக்கள் சரிபார்க்கப்பட்டது. அதிலும், குறிப்பாக டெபாசிட் கொண்டு வந்திருப்பதை உறுதி செய்து கொண்டு சரிபார்த்த பின்னரே ஆட்சியரின் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com