விருதுநகர்: அமைச்சர் எம்.எல்.ஏக்களுடன் வந்து அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சட்டப்பேரவை
விருதுநகர்: அமைச்சர் எம்.எல்.ஏக்களுடன் வந்து அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்
Updated on
1 min read

விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோருடன் வந்து   வேட்பு மனுவை ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் தாக்கல் செய்தார்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுகவின் சார்பில் வேட்பாளராக டி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் அதிமுக ஆதரவாளர்களுடன் செவ்வாய்கிழமை எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக அமைச்சருடன் சரியாக 2 மணிக்கு வந்தனர். அதையடுத்து, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு பகல் நேரம் 2.35 மணிக்கு நல்ல நேரம் என்பதால் அரை மணிநேரம் ஆட்சியரின் அறையிலேயே அமர்ந்திருந்தனர்.

அதையடுத்து, சரியாக 2.35 மணிக்கு அமைச்சர் முன்னிலையில் 3 வேட்பு மனுக்களை ராதாகிருஷ்ணன் ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் அளித்தார். அப்போது, வேட்பாளருடன் விருதுநகர் மக்களவை தேர்தல் பொறுப்பாளரும், மாநில மகளிரணி துணைச் செயலாளர் சக்திகோதண்டம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.பாண்டியராஜன், வைகைச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் மீண்டும் 10 நிமிடங்கள் வரையில் அமர்ந்திருந்து விட்டு புறப்பட்டுச் சென்றனர். அதையடுத்து, அதிமுக வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக டி.ராதாகிருஷ்ணன் மகன் ஆர்.தர்மராஜன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அதையடுத்து நுழைவு வாயில் பகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடையே பேசுகையில், அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று  வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. அதற்கு தொண்டர்களும், நி்ர்வாகிகளும் கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com