விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வேட்பு மனுத்தாக்கல்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். தனது ஆதரவாளர்களுடன் காமராஜர் மணிமண்டபம், நினைவு இல்லம் மற்றும்
விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வேட்பு மனுத்தாக்கல்
Updated on
1 min read

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹரிஹரனிடம் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். தனது ஆதரவாளர்களுடன் காமராஜர் மணிமண்டபம், நினைவு இல்லம் மற்றும் காமராஜர் நடமாடிய பகுதிகளான ஷத்திரிய வித்யாலாய பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளுக்கு நடைபயணமாகச் சென்று காமராஜர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கிருந்து நகராட்சி சாலை வழியாக சாத்தூர் முக்கு ரோடு வழியாக வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து புதுப்பேருந்து நிலையத்திற்கு   ஊர்வலமாக வந்தார்.

பின்னர் வாகனத்தில் ஏறி ஆட்சியர் அலுவலகத்திற்கு சரியாக 11.45 மணிக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, அவருடன் விருதுநகர் முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் பாபு, முன்னாள் மதுரை மாவட்ட துணைத்தலைவர் ஜெயராமன், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் அசோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதற்கு பின்னர் 15 நிமிடம் வரையில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்திருந்தார். அங்கிருந்த அலுவலர்கள் தேர்தல் தொடர்பான விதிமுறை மற்றும் வரவு செலவு படிவங்கள் உள்ளிட்டவைகளை கையொழுத்திட்டு பெற்றுக் கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காமராஜர் மணிமண்டபத்திலிருந்து அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோருடன் நடந்து வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளேன். கட்டாயம் காமராஜரின் ஆசியோடு வெற்றி பெறுவேன். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தவறான தகவலை எதிர்கட்சியினர் பரப்பி வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மத்திய ரயில்வே துறையின் அதே நிலைப்பாடுதான் இருக்கிறது. இதில், எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதிலும் ரயில்வே துறையினர் நீதிமன்றத்தில் மேம்பாலம் அமைக்கவே வலியுறுத்தியுள்ளனர். இதில், தரைப்பாலமா, மேம்பாலமா என மாநில அரசுதான் அடிக்கடி தன் நிலையை மீண்டும், மீண்டும் மாற்றி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். இத்தொகுதியின் மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்தால் குறுகிய காலத்திற்குள் இப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com