மதுரை:  மருந்துக் கிட்டங்கியில் தீ விபத்து

மதுரை நாயக்கர் புதுத்தெருவில் உள்ள பிரபல தியேட்டரின் ஒரு பகுதியில் கே.டி.பார்மா எனும் பெயரில் மருந்துக் கிட்டங்கி உள்ளது. பைபாஸ் சாலை பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மருந்துக்கிட்டங்கியில் தனது
Updated on
1 min read

மதுரையில் தனியார் மருந்துக் கிட்டங்கியில் திடீரென பற்றிய தீயை பல மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை அணைத்தனர்.

மதுரை நாயக்கர் புதுத்தெருவில் உள்ள பிரபல தியேட்டரின் ஒரு பகுதியில் கே.டி.பார்மா எனும் பெயரில் மருந்துக் கிட்டங்கி உள்ளது. பைபாஸ் சாலை பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மருந்துக்கிட்டங்கியில் தனது பணியாளருடன் இருந்துள்ளார். பின்னர் பகலில் கிட்டடங்கியை அடைத்துவிட்டு வீட்டிற்குச் செல்ல தயாராகி இரும்புக்கதவை அடைத்துள்ளார். அப்போது தீயில் பொருள்கள் கருகும் வாடை எழுந்ததால், கதவைச் சாத்தாமல் நின்றபோது, திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புகை எழுந்ததுடன் கடையில் தீப்பற்றியது.

இதில் காளிதாஸுக்கு முன்பக்க தலையில் லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்ததும் திடீர்நகர் தீயணைப்புத்துறையினர் விரைந்துவந்தனர். தீப் பற்றிய இடத்தின் அருகே தியேட்டரில் திரைப்படத்துக்கு வந்த ரசிகர்களும் ஓடினர். கிட்டங்கியில் இருந்த குளுகோஸ் பாட்டில்கள், ஊசி மருந்துகள் உள்ளிட்டவை வெடித்தன. இதனால் எழுந்த கரும்புகையை நவீன நுரையைப் பீய்ச்சி அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். ஆனால், தொடர்ந்து தீ எரிந்ததால், மேலும் இரு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

தீ எரிவதைக் காண அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பொதுமக்களை அப்புறப்படுத்த போலீஸôரும் வரவழைக்கப்பட்டனர். நீண்ட நேரத்திற்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் கருப்பையா வந்து விசாரணை நடத்தினார். மின் இன்வெர்ட்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com