வைகோவால் குரல் கொடுக்கத்தான் முடியும் எதுவும் செய்ய முடியாது: நாஞ்சில் சம்பத்

இந்த தொகுதியில் போட்டியிடும் வைகோவால் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத்தான் முடியுமே தவிர எதுவும் செய்ய முடியாது என கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
Updated on
1 min read

இந்த தொகுதியில் போட்டியிடும் வைகோவால் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத்தான் முடியுமே தவிர எதுவும் செய்ய முடியாது என கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பாலவநத்தம் கிராமத்தில் பொதுமக்களிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்குகள் சேகரித்து நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

16-வது மக்களவை தேர்தல் நாளை பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர். அதில், இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக உங்களிடம் வாக்குகள் கேட்டு வந்திருக்கிறேன். இக்கிராமத்தில் கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்தால் கருணாநிதிக்கு பாடை கட்ட தயராகி விட்டார்கள் என்பதையே காட்டுகிறது. இவர்கள் எல்லாம் மக்கள் எழுச்சிக்கு முன்னாள் காணமல் போய்விடுவார்கள். இருண்டு கிடக்கிற இந்தியாவை வெளிச்சத்திற்கும், புதைந்து கொண்டிருக்கிற இந்தியாவை சமவெளி பிரதேசத்திற்கும் முதல்வரால் தான் கொண்டு வரமுடியும்.

இந்தியாவில் 56 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். 52 சதவீதம் பேர் அறியாமை படுகுழியில் மூழ்கி கிடக்கிறார்கள். இந்தத் தேர்தலோடு பொதுமக்களே காங்கிரஸிற்கு கல்லறை கட்டுங்கள், அதில் துணையாக திமுகவையும் போட்டு புதையுங்கள். இலங்கையில் ஆயிரக்கணக்கான பேர்களை கொண்டு குவித்த காங்கிரஸிற்கு உதவியாக குலத்துரோகி கருணாநிதி இருந்தார்.

அதேபோல், இந்த தொகுதியில் போட்டியிடுகிற வைகோவால் குரல் கொடுக்கத்தான் முடியுமே தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியாது. அதைச் செயல்படுத்துகிற அதிகாரத்தில் இருக்கும் முதல்வரால் மட்டுமே முடியும். ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவித்து, இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். அதேபோல், தமிழக மக்களின் வீட்டிற்கு எக்காரணம் கொண்டு பசி பட்டினி வந்துவிடக் கூடாது.

இதற்காகவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக 20 கிலோ அரிசியும், ஏழை தங்கைகளின் திருமணத்திற்கு பணம் நகை இல்லாத நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக பிளஸ்2 படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரமும், 4 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்குகிறார். அதேபோல், சிப்பாய் போல் கம்பீரமாக நடந்து செல்வதற்கு மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் காலணிகளையும், பொது அறிவுடன் கல்வி கற்பதற்கு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார்.

இனிமேல் இந்தியா விடிய வேண்டும் என்றால் முதல்வரால் மட்டுமே முடியும். இதுவரையில் பாரத மாத்தஜீ ஜே என்று தான் முழங்கி வருகின்றனர். இனிமேல் பாரத மாதாவுக்கு ஜெ தான் சொல்லனும். அதனால், நடைபெற இருக்கிற தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என நாஞ்சில் சம்பத் கேட்டுக் கொண்டார்.

உடன் அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன், தொகுதி செயலாளர் முத்துராஜா, ஒன்றியக் குழு தலைவர்கள் யோகவாசுதேவன், கலாநிதி உள்ளிட்ட அக்கட்சியினர் இருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com