மின் தட்டுப்பாடுக்கு எதிர்கட்சிகளின் சதியே என ஜெயலலிதா கூறுவது தகுதியற்ற செயல்: ஸ்டாலின் பேட்டி

நாமக்கல்லில் இன்று அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டு மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
மின் தட்டுப்பாடுக்கு எதிர்கட்சிகளின் சதியே என ஜெயலலிதா கூறுவது தகுதியற்ற செயல்: ஸ்டாலின் பேட்டி
Updated on
1 min read

நாமக்கல்லில் இன்று அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டு மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர் தமிழ்நாட்டில் மின் தட்டுபாடுக்கு எதிர்கட்சிகளின் சதியே காரணம் என முதல்வர் கூறுவது முறையற்றது. உளவுத்துறை அரசு, என எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு கூறுவதன் மூலம் முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் என தெரிகிறது. எனவே அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் நேற்று சென்னை வந்திருந்த மோடி தமிழக நலனில் அதிமுக திமுக கட்சிகளுக்கு அக்கறை இல்லை என்று கூறியிருப்பது பற்றி கேட்டபோது குஜராத்தில் அவர் ஏதாவது செய்து விட்டு வந்து இங்கு பேசட்டும் என கூறினார். அழகிரி திமுக 4 வது இடத்துக்கு தள்ளப்படும் என கூறியிருப்பதுகுறித்து பதில் சொல்லிய ஸ்டாலின் இதுபோன்ற செய்திகளை படிப்பதில்லை என்றார்.

மேலும் தமிழகத்தில் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றார். எல்லா கட்சிகளுமே இதைத்தான் சொல்கின்றன என கேட்டபோது அது அவரவர் விருப்பம் என்றார். திமுகவில் இருந்து அழகிரி விலக்கப்பட்ட பின்பும் கட்சியினரினையே கூட்டம் நடத்துவது குறித்து கேட்டபோது கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com