திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு
Updated on
1 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணியளவில் விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேசகம், மற்றும் தீர்த்தவாரியும் நடைபெற்றது.

திருக்கோயிலில் சித்திரை விசு கனிகாணும் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக உள்பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட காய்கனிகள் வைக்கப்பட்டிருந்தது.

அதனை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. செந்தூர் பாண்டியன் பார்வையிட்டார். தொடர்ந்து உச்சிகால அபிஷேகம் மற்றும் அன்னாபிஷேகம், சிறப்பு அன்னதானம்  நடந்தது. புத்தாண்டன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ப.தா. கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) இரா. ஞானசேகர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு பணியில் துணை கண்காணிப்பாளர் செள. கோவிந்தராஜ்,  காவல் ஆய்வாளர்கள்  கோ.பத்மநாப பிள்ளை. எஸ். இந்திரா, உள்ளிட்ட காவல்துறையினர். ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com