எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லை அருகே இளைஞர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி அருகே கரையிருப்பில் மணல் அள்ளுவது தொடர்பாக எழுந்த மோதலில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்

News image
Updated On :20 ஏப்ரல் 2014, 2:50 pm

முத்துக்குமார்

திருநெல்வேலி அருகே கரையிருப்பில் மணல் அள்ளுவது தொடர்பாக எழுந்த மோதலில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி தாழையூத்து அருகே உள்ள கரையிருப்பு வடக்கூரைச் சேர்ந்த சிவனுபாண்டி மகன் சித்திரைகுமார் (35). இவரது சகோதரர் சுப்பிரமணியன் (30). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் மண் அள்ளுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதில் இருதரப்பினரும் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த சித்திரைகுமார், சுப்பிரமணியன், மற்றொரு தரப்பைச் சேர்ந்த கரையிருப்பு சுகுமார் மகன் செந்தில்குமார் (36), பேச்சிமுத்து மகன் முருககுட்டி (50),  சரவணகுமார் (22), மாயாண்டி மகன் காந்திமணி (38) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால், வழியிலேயே சித்திரைகுமார் இறந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் செந்தில்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.