விருதுநகரில் தனியார் பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரத்தின் மகன் மூர்த்தி(29). இதே பகுதியில் உள்ள கட்டையாபுரத்தைச் சேர்ந்தவர் ஜேசுராஜ்(35). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் தனியார் பள்ளியில் காலியிடம் இருப்பதாகவும், அதை மூர்த்தியின் மனைவிக்கு வாங்கி தருவாதகவும் கூறி அணுகியுள்ளார். இதை உண்மைமெயன நம்பியவர் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை ஜேசுராஜிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், குறிப்பிட்ட நாள்களுக்குள் வாங்கித் தராமல் தாமதம் செய்து வந்துள்ளார். அதையடுத்து, வேலைதான் வாங்கிக் கொடுக்கவில்லை, கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் படி கேட்டதற்கு ஜேசுராஜ் தர மறுத்தாராம். உடனே இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் மூர்த்தி புகார் செய்தார். அதன் பேரில் ஜேசுராஜ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து மோசடி சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.