இழப்பீடு வழங்காததால் அரசு விரைவு பேருந்து ஜப்தி

நாமக்கல் அருகே என்.புதுப்ப்டி வீராக்கவுண்டரின் மகன் கந்தசாமி(40). இவர் 1997 ஆகஸ்ட் 9-ம் தேதி அப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு
Updated on
1 min read

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நீதிமன்றம் விதித்த இழப்பீட்டுத் தொகை வழங்கப் படாததால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்து வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

நாமக்கல் அருகே என்.புதுப்ப்டி வீராக்கவுண்டரின் மகன் கந்தசாமி(40). இவர் 1997 ஆகஸ்ட் 9-ம் தேதி அப்பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மோதி கந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி செல்வராணி, இழப்பீடு கோரி நாமக்கல் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கந்தசாமியின் குடும்பத்துக்கு ரூ.2.46 லட்சம் இழப்பீடு வழங்கிட தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு 2001 ஆகஸ்ட் 29-ம் தேதி தீர்ப்பளித்தது.

உரிய காலத்தில் அந்த தொகை வழங்கப்படாததால் செல்வராணி, நீதிமன்றத்தில் நிறைவேற்றும் மனுத் தாக்கல் செய்தார். அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட கந்தசாமியின் குடும்பத்துக்கு வட்டியுடன் ரூ.5.25 லட்சம் வழங்கிட 2012 மார்ச் 26-ம் தேதி உத்தரவிட்டது. இதனடிப்படையில், பெங்களூரில் இருந்து திருச்சி செல்ல நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அரசு விரைவு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com