விருதுநகர் மாவட்டத்தில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைப்பு

விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் வாக்குச்
Updated on
1 min read

விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் வாக்குச் சாவடிகள் வாரியாக வைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின் வெள்ளிக்கிழமை அந்த அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய சடட்ப்பேரவை தொகுதிகள் அடங்கும். இதில், வாக்கு எண்ணிக்கை இரண்டு மையங்களில் நடைபெற இருக்கிறது. செந்திக்குமார நாடார் கல்லூரி மையத்தில் அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் பாதிவான வாக்குகளும், வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இந்நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதியில் 1711 வாக்குச்சாவடி மையங்களிலும், பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அதையடுத்து மண்டல தேர்தல் அலுவலர்கள் மூலம் வாகனங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸார் பாதுகாப்புடன் கொண்டு வந்தனர். இப்பணி இரவு 11.30 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டன. அதையடுத்து, மக்களவை தொகுதி மேற்பார்வையாளர் அனில்குமார், மாவட்ட தேர்தல் அலுவலர் டி.என்.ஹரிஹரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வாக்குச் சாவடி வாரியாக சரிபார்த்து வைக்கப்பட்டு அறையை பூட்டி சீல் வைத்தனர்.

இது தொடர்பாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கூறியதாவது: குறிப்பிட்ட மையங்களில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே.16ம் நடைபெற இருக்கிறது. அது வரையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துணை ராணுவப்படையினர், ஆயுதப்படை பிரிவு போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படை போலீஸார் தலைமையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கல்லூரி பின்புறம், முன்புறம் மற்றும் வளாகச் சுற்றுச் சுவர் உள்ளிட்ட பகுதிகளில் சிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

அப்போது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, கோட்டாட்சியர்கள் மணிவண்ணன்(சிவகாசி), உதயகுமார்(அருப்புக்கோட்டை) நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com