ஜெ. குறித்த அவதூறான கருத்து: ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட இலங்கை ராணுவ இணையதளத்தைக் கண்டித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர அ.தி.மு.க. சார்பிலும்


தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட இலங்கை ராணுவ இணையதளத்தைக் கண்டித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர அ.தி.மு.க. சார்பிலும், வழக்குரைஞர்களும் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவ பொம்மையை வெள்ளிக்கிழமை மாலை எரித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறன கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைவெளியாகி இருந்தது. இதில் குறிப்பாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அத்துமீறி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இந்திய பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதுவது குறித்து மிகவும் இழிவுபடுத்தும் விதமான விமனர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பில் இருந்தன.
இதனைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் தலைமயில் ஏராளமான அ.தி.மு.க.வினர் பஸ்நிலையம் முன்பு ராஜபக்சேயின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.முருகன் தலையில் வழக்குரைஞர்கள் ராஜபக்சேயின் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...