வரதட்சணை கொடுமைப்படுத்துவதாக கணவர் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(26). இதே ஊரைச் சேர்ந்த அழகுமலை என்பவரின் மகன் அழகர்சாமி(32). இவர்கள் இருவரும் காதலித்து வீட்டார்கள் சம்மதமின்றி
Updated on
1 min read

விருதுநகர் அருகே வரதட்சணை கொடுமைப்படுத்துவதாக கணவர் குடும்பத்தினர் மீது மனைவி புகார் செய்ததன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள்(26). இதே ஊரைச் சேர்ந்த அழகுமலை என்பவரின் மகன் அழகர்சாமி(32). இவர்கள் இருவரும் காதலித்து வீட்டார்கள் சம்மதமின்றி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது தந்தை அழகர்சாமி, தாயார் காத்தம்மாள் ஆகியோரின் பேச்சைக் கேட்டு கொடுமைப்படுத்தியும், பாலியல் தொந்தரவும் கொடுத்து வருகிறார்.

மேலும், தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளதால், அதை கலைக்க வலியுறுத்தியதால் மறுத்தேன். அதற்காக அடித்து உதைத்து சிர்தவதை செய்து எனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பேச்சியம்மாள் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் கணவர் அழகர்சாமி, தந்தை அழகுமலை, தாயார் காத்தாம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com