

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற பழைய மாணவர்கள் சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இக்கல்லூரியில் கடந்த 1987 முதல் 1990-ம் ஆண்டு வரை இயற்பியல் துறையில் பயின்ற மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆதித்தனார் கல்லூரி முதல்வர் முனைவர் வெ.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
கல்லூரி செயலர் இராமசேகரன் நிகழ்;ச்சியை துவக்கி வைத்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர் மாதவன், முனைவர்கள் தியாகராஜன், அண்ணாதுரை, பி.கே.கணேசன், மகேந்திரன், செல்வராஜ், சுயம்பு, ஆராய்ச்சி மாணவர் சாந்தி, கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் பரமசிவம், ஆய்வக உதவியாளர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன், பன்னீர்செல்வம்,
பழனிவேல் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, பட்டதாரி ஆசிரியர்கள் கருணாகரன், அருமைநாயகம், பென்காம்துரை, சாய்செந்தில்நாதன், அண்ணாமலை தொடர்கல்வி நிலைய உதவியாளர் பெனடிக்
சைமன் பீற்றர், தனியார் நிறுவன மேலாளர்கள் ஜெயராஜ், ஆரோக்கியராஜ், தொழிலதிபர்கள் ஆனந்த ராகவன், ராம் லெட்சுமணன், கால்பிரேட் சற்குணம் உள்ளிட்டோர் தங்கள் பழைய கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் மாணவர் முனைவர்
சந்தணராஜ் வரவேற்புரையாற்றினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சுடலை, சந்தணராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.