பாலீஷ் போடுவதாக கூறி நகைகளை திருடிவந்த கும்பல் சோழவந்தானில் சிக்கியது

மதுரை பகுதியில் பாலீஷ்போடுவதாகக் கூறி பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்டுவந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை போலீஸôர் செவ்வாய்க்கிழமை
Updated on
1 min read

மதுரை பகுதியில் பாலீஷ்போடுவதாகக் கூறி பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்டுவந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை போலீஸôர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

 மதுரை மாவட்டம் சோழவநதான், கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளி, பித்தளைப் பொருள்களுக்கும், தங்கநகைகளுக்கும் பாலீஸ் போடுவதாகக் கூறி நகைகளைத் திருடிய புகார்கள் எழுந்தன. கடந்த ஆண்டு சோழவந்தான் பகுதியில் இதுபோல நகை திருடிய கும்பலை பிடிக்க போலீஸôர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தனர்.

 இந்நிலையில் சோழவந்தான் தெற்கு எல்லை புதுத்தெருவில் பேபி என்ற பெண்ணிடம் வந்த 4 வடமாநில இளைஞர்கள் நகைக்கு பாலீஸ் போடுவதாகக் கூறியுள்ளனர். அவர் 3 கிராம் மோதிரத்தை எடுத்துத்தந்துள்ளார்.

 பாலீஸ் போடுவதாகக் கூறிய இளைஞர்கள் நகையை வாங்கி தப்பிக்க முயற்சித்துள்ளனர். உடனே பேபி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் திரண்டு 4 பேரையும் பிடித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 விசாரணையில் பீகார் மாநிலம் சபோல் பகுதியைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் (40), முகேஷ்குமார் (24), சஞ்சய் (36) மற்றும் முகம்மது சம்சத் (28) எனத் தெரியவந்தது. இவர்கள் அவ்வப்போது தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் வந்து பாலீஸ் போடுவதாகக் கூறி நகைகளைத் திருடிச்செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

 கைது செய்யப்பட்டவர்கள் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com