19 வயது தொழிலாளியை திருமணம் செய்த 12 வயது சிறுமி மீட்பு

நாமக்கல் அருகே 19 வயது தொழிலாளிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட 12 வயது சிறுமியை அதிகாரிகள் மீட்டனர். தொடர்ந்து அவரை படிக்க
Updated on
1 min read

நாமக்கல் அருகே 19 வயது தொழிலாளிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட 12 வயது சிறுமியை அதிகாரிகள் மீட்டனர். தொடர்ந்து அவரை படிக்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுமி, கடந்தாண்டு 6ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த சிறுமிக்கும் நாமக்கல் வடுகபட்டியைச் சேர்ந்த இளையராஜா மகனான கல் உடைக்கும் தொழிலாளி செந்தில்ராஜா(19) என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் செய்யப்பட்டது. குடும்பத்துடன் வடுகபட்டியில் இருந்த நிலையில் செந்தில்ராஜா அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதை யடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சிறுமி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதுகுறித்து சைல்டு லைனுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வருவாய்த்துறை, சமூக நலத்துறை அலுவலர்கள், சைல்டு லைன் ஊழியர்கள் அப்பகுதிக்குச் சென்று சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து அந்த சிறுமியை படிக்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இளம்வயது திருமணம் செய்ததற்காக செந்தில்ராஜா, இரு வீட்டு பெற்றோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com