மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு நெல்லை வந்த மதுரை சிறுமி பாலியல் பலாத்காரம்: ஆட்டோ ஓட்டுநர் கைது

திருநெல்வேலிக்கு ரயில் முலம் வந்த மதுரையைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :8 ஆகஸ்ட் 2014, 2:21 pm

திருநெல்வேலிக்கு ரயில் முலம் வந்த மதுரையைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் வியாழக்கிழமை இரவு காவல் ஆய்வாளர் ரகுபதிராஜா, உதவி ஆய்வாளர் மெர்ஸி தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு இளைஞருடன் வந்த சிறுமி திடீரென சத்தம்போட்டதால் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில் மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அந்த 15 வயது சிறுமி, வீட்டில் கோபித்துக் கொண்டு ரயில் மூலம் நெல்லைக்கு வந்து எங்கு செல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த திருநெல்வேலி சி.என்.கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வெள்ளைத்துரை (18) அந்த சிறுமியை சிரீபுரம் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டராம்.

 பின்னர் சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்தபோதுதான் போலீஸாரை கண்டு சிறுமி சத்தம் போட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வெள்ளைத்துரையை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அந்த சிறுமியை, திருநெல்வேலியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.