போலீஸ் அதிகாரி கார் மோதி காயமடைந்த மாணவர் சாவு

மதுரை செல்லூர் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில். இவரது மகன் சையது உமர்பாரூக் (19). தனியார் பொறியியல் கல்லூரி மாணவர். இவர் கடந்த ஜூலை 31-ல் நண்பர்
Updated on
1 min read

மதுரையில் போலீஸ் அதிகாரி கார் மோதிய விபத்தில் காயமடைந்த பொறியியல் கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறு உயிரிழந்தார்.

மதுரை செல்லூர் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில். இவரது மகன் சையது உமர்பாரூக் (19). தனியார் பொறியியல் கல்லூரி மாணவர். இவர் கடந்த ஜூலை 31-ல் நண்பர் பிரசன்னாவுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரி பகுதியில் உள்ள விரகனூர் அணை அருகே வந்துள்ளார். அப்போது அங்கு மதுரை ஆயுதப்படைப் பிரிவு உதவி ஆணையர் கார் வந்ததாகக் கூறப்படுகிறது. காரும், மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் சையது உமர்பாரூக், பிரசன்னா காயமடைந்தனர். 

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உமர்பாரூக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலைமான் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com