சிறைப் பணியாளர்களுக்கு 100 குடியிருப்புகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சிறைத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டில் (2014-15) 100 குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், வேலூர், நாகப்பட்டினம் ஆகிய இரண்டு

சிறைத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டில் (2014-15) 100 குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், வேலூர், நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களின் நீதிமன்றங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் எனவும் அவர் அறிவிப்புச் செய்தார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை படித்தளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேனி மாவட்டத்தில் சிறைச் சாலைகள் ஏதும் இல்லாததால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிறைவாசிகள் இப்போது மதுரை மத்திய சிறைக்கும், மேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் (பார்ஸ்டல்) அழைத்துச் செல்லப்படுகின்றனர். எனவே, அந்தச் சிறைவாசிகளை தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் உள்ள சிரமங்களைக் களையவும், மத்திய மத்திய சிறையில் உள்ள இடர்பாடுகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேனி மாவட்டத்தில் 200 சிறைவாசிகள் தங்கும் வகையில், பார்ஸ்டல் பள்ளியை உள்ளடக்கிய ஒரு மாவட்டச் சிறை அமைக்கப்படும்.சிறைப் பாதுகாப்புப் பணிகள், அவசர கால நேர்வுகளில் பணிபுரிய சிறை பணியாளர்களுக்கு சிறை வளாகத்திலேயே குடியிருப்பு அவசியமாகிறது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் ரூ.13.16 கோடியில் 100 குடியிருப்புகள் கட்டப்படும்.

நீதித் துறை: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், அங்குள்ள வளாகத்தில் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ரூ.20 கோடியிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் இப்போதுள்ள நீதிமன்ற வளாகத்திலேயே ரூ.19.52 கோடி செலவில் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com