தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே வேடநத்தம் கிராமத்தில் காருக்குள் சிக்கிக் கொண்ட 4 குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
இசக்கியம்மாள் (8), ஆதி (4), முத்தழகு (10), மோசஸ் (7) என நான்கு பேரும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தில் இசக்கியம்மன் கோவில் திருவிழாவின் போது விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தக் கோவிலைச் சுற்றி, பைனான்ஸ்ஸில் பெறப்பட்டு பிரச்னை காரணமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள கார்கள் சில எப்போதும் நிறுத்தப் பட்டிருக்கும். இந்தக் கார்கள் ஒன்றில், இவர்கள் நான்கு பேரும் 9 மணிக்கு விளையாடியபோது, காருக்குள் ஏறியுள்ளனர். அப்போது, தானியங்கி கதவு பூட்டிக் கொண்டதால், காரில் இருந்து நால்வராலும் வெளியே வர இயலவில்லை. இதனால் உள்ளேயே மாட்டிக் கொண்ட நால்வரும் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். 9 மணிக்குப் பிறகு நான்கு பேரையும் பெற்றோர் தேடியுள்ளனர். இவர்கள் காருக்குள் சென்றிருப்பார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. காரில் கறுப்பு பிலிம்கள் ஒட்டப் பட்டிருந்ததால், காருக்குள் இவர்கள் இருந்ததும் வெளியில் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்த தூத்துக்குடி எஸ்பி., மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.