காரியாபட்டி அருகே கார் டயர் வெடித்த விபத்தில் தந்தை,மகன் சாவு

விருதுநகர் அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார்  தடுப்புகளை தாண்டி மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இரு பெண்கள் உள்பட
Updated on
1 min read

விருதுநகர் அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார்  தடுப்புகளை தாண்டி மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இரு பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த அமலதாஸ் என்பவரின் மகன் அருளானந்தம்(35). இவரது மகன் கேரின்(7), மனைவி அர்ச்சனா(30). இவர்களுடன் காரில் பந்தல்குடியில் உள்ள தங்கையின் புது வீடு வைபவ நிகழ்ச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார்களாம். அங்கு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலையில் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அதேபோல், ரமேஷ்கண்ணன்(45) மற்றும் அவரது மனைவி சுப்புரத்தினம்(37) ஆகியோர் காரில் காரியாபட்டியிலிருந்து-அருப்புக்கோட்டை நோக்கிச் சென்றனர்.   அப்போது, காரியாபட்டியை அடுத்த வக்கனாங்குண்டு அருகே 4 வழிச்சாலையில் வரும் போது திடீரென கார் டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார்  தடுப்புகளை தாண்டி எதிரே காரியாபட்டியிலிருந்து-அருப்புக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரமேஷ்கண்ணன் கார் மீது மோதியது. இதில், அருளானந்தம்(35), அவரது மகன் கேரின்(7) ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் அருளானந்தம் மனைவி அர்ச்சனா, மற்றொரு காரில் வந்த ரமேஷ்கண்ணன், அவரது மனைவி சுப்புரத்தினம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த காரியாபட்டி போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காரியாபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com