சீவலப்பேரி அருகே விபத்து: இளைஞர் சாவு
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே நிகழ்ந்த விபத்தில் இளைஞர் திங்கள்கிழமை இறந்தார்.


திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே நிகழ்ந்த விபத்தில் இளைஞர் திங்கள்கிழமை இறந்தார்.
சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் மகன் கொம்பையா (35). இவர், ஊருக்கு மேல் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு தனது பைக்கில் திங்கள்கிழமை சென்றுள்ளார். பின்னர் தோட்டத்து பணியாளரான அன்னமரியாள் (42) என்பவரை வீட்டில் கொண்டு விடுவதற்காக பொட்டல்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தாராம். தாம்போதி பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கொம்பையா இறந்தார். அன்னமரியாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சீவலப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் (பொ) பிரதாபன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த கொம்பையா, திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலர் பாப்புலர் முத்தையாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...