கேரளாவுக்கு மணல் கடத்திய லாரிகள் 2 பறிமுதல் செய்யப்பட்டன. லாரிகளை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் இருந்து கேரளத்துக்கு லாரிகளில் மணல் கடத்திச் சென்றதைப் பார்த்த அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரன்குடியில் லாரிகளைப் பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (34), கண்ணன் (25), சுதாகரன் (27), கமுதியைச் சேர்ந்த திருப்பதி (29) ஆகிய லாரி ஓட்டுநர்கள் 4 பேரும் இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.