

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த குமார் 12.5.2014 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
திருநெல்வேலி மாநகர நுண்ணறிவுப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சு.ஸ்ரீதர் ரெங்கராஜ் 12.5.2014 மாரடைப்பால் காலமானார்.
திருச்சிராப்பள்ளி மாநகரம், எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஏ.சீனிவாசன் 17.5.2014 அன்று மன்னார்புரம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த நடேசன் 20.5.2014 அன்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைகாடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த கிருஷ்ணபிரசாத் 24.5.2014 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை பெருநகர காவல், பல்லாவரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஜோதி மாணிக்கம் 24.5.2014 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை பெருநகர காவல், ஐ.சி.எப். காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஆ.வெங்கடேசன் 27.5.2014 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த முடியப்பன் 28.5.2014 அன்று மாரடைப்பால் காலமானார்.
திண்டுக்கல் நகரம் மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த முருகேசன் 29.5.2014 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த செல்வக்குமார் 31.5.2014 அன்று பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர் பந்தல் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குமார், ஸ்ரீதர் ரெங்கராஜ், சீனிவாசன், கிருஷ்ணபிரசாத், ஜோதி மாணிக்கம், முடியப்பன், முருகேசன்; தலைமைக் காவலர்கள் நடேசன், வெங்கடேசன், செல்வக்குமார்; ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும், மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.