விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தயார் செய்து காய வைத்திருந்த தீப்பெட்டிகள் எரிந்து நாசமானது.
Updated on
1 min read

விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தயார் செய்து காய வைத்திருந்த தீப்பெட்டிகள் எரிந்து நாசமானது.

விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையைச் சேர்ந்தவர் பத்மநாபன்(45). இவர் விருதுநகர்-வடமலைக்குறிச்சி சாலை மீதுள்ள சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதற்கு முதல் நாள் தயாரித்து தீப்பெட்டிகளில் இருபுறமும் மருந்துகள் தடவி தயார் செய்து காய வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திடீரென தீப்பிடித்துள்ளது. அந்த தீ ஆலைக்குள் மளமளவென பரவியது. இதில் தயாரித்து வைத்திருந்த காலி தீப்பெட்டிகள் வைத்திருந்த குடோன் முழுவதும் எரிந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உரிமையாளருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்

மேலும் தீ பரவாமல் தடு்க்கும் வகையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தயாரித்து வைத்திருந்த காலி தீப்பெட்டிகள் மற்றும் மோட்டார் பைக் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com