மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மேலப்பாளையத்தில் மையவாடி அமைக்கக் கோரி சடலம்போல வேடமணிந்து வந்து ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் மையவாடி (மயானம்) அமைக்கக்கோரி சடலம்போல வேடமணிந்து வந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

Updated On :25 ஆகஸ்ட் 2014, 9:50 am

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் மையவாடி (மயானம்) அமைக்கக்கோரி சடலம்போல வேடமணிந்து வந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த சிலர் சடலம்போல வேடமணிந்து, சடலம் கோரிக்கைகளைக் கூறுவது போல பதாகைகளைத் தொடங்கவிட்டபடி நூதன முறையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு:

மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.  இங்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட மையவாடியில்தான் இன்று வரையிலும் இறந்த உடல்கள் அடக்கம் செய்யபட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு அப் பகுதி மக்களுக்கு மேலும் ஒரு மையவாடி இடம் ஒதுக்க வேண்டுமென பலதரப்பினரும் அரசை, மாநகராட்சி நிர்வாகத்தை, மக்கள் பிரதிநிதிகளை பல வருடங்களாக தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

அரசு தரப்பில் இடம் ஒதுக்கப்பட்டதாகவும், பின்பு அது ஒரு சிலரின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் எங்களுக்கு கிடைத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு சடலத்தை நாய்கள் வெளியே இழுத்துப்போட்டதால் மக்கள் மத்தியில் பெரும் வருத்தம் ஏற்பட்டுள்ளது.

முன்னோர்களின் சடலங்கள் இதுபோன்ற சம்பவங்களால் இழிவுபடுத்தப்படுவதில் இருந்தும், பொதுமக்கள் சிறுகுழந்தைகள் தோற்று நோய்களின் பிடியில் சிக்காமல் இருக்கும் வகையிலும் புதிதாக ஒரு மையவாடி அமைக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.