ஆற்றில் மணல் கடத்தியதாக 2பேர் கைது: லாரி பறிமுதல்

விருதுநகர் அருகே துளுக்கப்பட்டி கிராமத்தை அடுத்த அர்ச்சுனா ஆற்றுப்பகுதியில் மணல் கடத்திச் செல்வதாக வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துளுக்கப்பட்டி
Updated on
1 min read

விருதுநகர் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தியது தொடர்பாக 2 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே துளுக்கப்பட்டி கிராமத்தை அடுத்த அர்ச்சுனா ஆற்றுப்பகுதியில் மணல் கடத்திச் செல்வதாக வச்சக்காரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் துளுக்கப்பட்டி-வேப்பிலைபட்டி சாலையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரி திடீரென போலீசாரை பார்த்ததும் திருப்பி தப்பி செல்ல முயற்சித்தனர்.

உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸார் விரைவாக சென்று சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில் வேப்பிலைப்பட்டியைச் சேர்ந்த லாரியின் உரிமையாளர் ஜெகதீஸ்குமார்(32) என்பதும், லாரியின் ஓட்டுநர் சங்கர்கணேஷ்(28) என்ற விவரமும் தெரியவந்தது. இது குறித்து மேற்குறிப்பிட்ட 2 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். அதோடு, லாரியையும் பறிமுதல் செய்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com