விருதுநகர் அருகே கருந்திரிகளை வீட்டில் அனுமதியின்றி தயாரித்தவரையும், மோட்டார் சைக்கிளில் கடத்தியதாகவும் என இரண்டு பேரை ஆமத்தூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே ஒண்டிப்புநாயக்கனூர் கண்மாய்பட்டி பகுதியில் வீட்டில் அனுமதியின்றி கருந்திரிகளை அனுமதியின்றி தயாரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் மேற்குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, சசிகுமார்(32) என்பவரின் வீட்டில் சோதனையிடும் போது கருந்திரி கட்டுக்கள் மற்றும் வெள்ளைத்திரி கட்டுக்களையும் தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக வழக்கு பதிந்து சசிகுமாரை கைது செய்ததோடு, அங்கிருந்த 1530 கருந்திரி கட்டுக்களையும், 213 வெள்ளைத்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவம்: சங்கரலிங்காபுரம்-முதலிபட்டி சாலையில் ஆமத்தூர் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சாக்கு பையில் 237 கருந்திரி கட்டுக்கள் இருந்தது. உடனே இது தொடர்பாக விசாரணை செய்ததில் முதலிபட்டி அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(37) என்பதும், கருந்திரிகளை தயார் செய்து வெள்ளைத்திரி ஒட்டுவதற்காக கொண்டு செல்வதாகவும் தகவல் தெரியவந்தது. உடனே ஆறுமுகம் மீது ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.